Ads 468x60px

Pages

Tuesday 1 March 2011

வோடாபோன் Mi-Fi - இணைய இணைப்பை பகிர

வீட்டுல ஒரு இணைய இணைப்பு + அலுவலகத்தில் ஒரு இணைய இணைப்பு + வெளியூர் சென்றால் அதற்கென்று தனியாக இணைய இணைப்பு. 

ஒரே இணைய இணைப்பை டெஸ்க்டாப் , லேப்டாப், மொபைல் என்று பகிர்த்து கொள்வதில் உள்ள அசௌகரியங்கள். இவற்றை எளிமையாக்க வந்துள்ளது வோடாபோன் Mi-Fi . 

இது Wi-Fi ஹாட் ஸ்பாட்டாக செயல்படுகிறது. இதனை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதன் மூலம் உங்களிடம் உள்ள ஒரே 3G இணைய இணைப்பை ஐந்து வெவ்வேறு கணினிகள், மொபைல்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட Wi-Fi வசதி உள்ள உபகரணங்களில் பகிர்ந்து கொள்ள முடியும். எந்த மென்பொருளும் இன்ஸ்டால் செய்ய  வேண்டிய தொந்தரவு  இல்லை. 

கையடக்கமானது. வீட்டில் ஒன்றிற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் இணையத்தை பயன்படுத்தி கொள்ள முடியும். தாராள மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணைய இணைப்பை பகிர்ந்து கொடுக்கலாம். 

இதனை சுவிட்ச் ஆன் செய்த உடன் உங்கள் கணினியில் Wi-Fi தொடர்பு இணைப்பு பெற்று விடும். நான்கு முதல் ஐந்து  மணி நேரம் பேக்கப் நிற்கும் என்கின்றனர். 

பல்வேறு தேவைகளுக்காக பல இணைய இணைப்புகளை வைத்து பில் தொகை எகிறி அவதிப்படுபவர்களுக்கு  இது ஒரு வரப்பிரசாதம். இதன் விலை ரூ. 5500.

மேலும் விபரங்களுக்கு இங்கே சென்று பாருங்கள். http://www.vodafone.in/3gworld/pages/3g_serivces.aspx?cid=mum

 மக்களே இது ஒரு செய்தியாகவே உங்களுக்கு தந்துள்ளேன். உங்கள் ஏரியாவில் வோடாபோன் இணைய வேகம் எப்படி உள்ளது, சேவை எப்படி உள்ளது  என்பதை அறிந்து கொண்டு இதனை வாங்குங்கள். விசாரிக்காமல் வாங்கி விட்டு  சரி இல்லை என்று என்னை சபித்து விடாதீர்கள் :)

0 comments:

Post a Comment