Ads 468x60px

Pages

Thursday 10 March 2011

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மார்ச் 14 வெளியீடு

இணைய உலாவிகளில் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரருக்குத்தான் (Internet Explorer) முதலிடம். விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவதால் பெரும்பாலும் மற்ற இணைய உலாவிகளைப் பற்றி அறியாதவர்கள் இன்னும் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை பயன்படுத்தி வருகிறார்கள். 

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 பிரபலமான ஒன்று. இன்னும் பலர் இதனை உபயோகித்து வருகின்றனர். பயர்பாக்ஸ், குரோம் உலாவிகள் வரவுக்கு பின்னர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவி சந்தையில் தனது இடத்தை சிறிது சிறிதாக இழந்து வருகிறது. 

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஏழு, எட்டு என்று புதிய பதிப்புகள் வெளியிட்டு இருந்தாலும், பயனர்களிடம் வரவேற்பை பெற இயலவில்லை. 

அடுத்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 ஐ பெரும் சிரத்தையுடன் உருவாக்கி வருகிறார்கள். இதன் பீட்டா, ஆர்சி பதிப்புகள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இதன் இறுதி வடிவம் மார்ச் 14 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து விண்டோஸ் பிளாக்கில் அறிவிப்புக்கான லிங்க் 

0 comments:

Post a Comment