Ads 468x60px

Pages

Thursday 10 March 2011

உபுண்டு நெட்புக் பதிப்பு இனி வெளிவராது

லினக்ஸ் இயங்குதள பதிப்புகளில் பிரபலமானது உபுண்டு. லினக்ஸ் என்றால் உபுண்டு என்ற பெயரும் நியாபகத்திற்கு வருவதை மறுப்பதற்கில்லை.  அது லினக்ஸ் சர்வர், லினக்ஸ் டெஸ்க்டாப், லினக்ஸ் நெட்புக் என பல்வேறு பதிப்புகளாக வெளியாகி வந்தது.

டேப்லெட் கணினிகள் வருகைக்கு பிறகு நெட்புக் கணினிகளுக்கான மவுசு குறைந்து வருவது உண்மை. உபுண்டு தற்போது நெட்புக் கணினிகளுக்கென வெளியிட்டு வந்த உபுண்டு நெட்புக் பதிப்பை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. 

உபுண்டுவின் அடுத்த வெளியீடான 11.04 டெஸ்க்டாப் பதிப்பு, நெட்புக் பதிப்பு என தனித்தனியே இல்லாமல், உபுண்டு 11.04 என்றே வெளிவரும் என அறிவித்துள்ளனர். இது டெஸ்க்டாப், லேப்டாப், நெட்புக் அனைத்திலும் சிறப்பாக இயங்கும் என கூறி உள்ளனர்.  உபுண்டு சர்வர் பதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. 

முன்பு கூகுல் குரோம் ஒஎஸ் நெட்புக் கணினிகளில்தான் முதலில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்கள். நெட்புக் கணினிகளுக்கு சரிவு முகமாக உள்ள இந்த நேரத்தில், இதில் ஏதும் மாற்றம் வருமா என பொறுத்திருந்து பார்ப்போம். 

2 comments:

ஞாஞளஙலாழன் said...

எனது நண்பரும் உபுண்டு தான் வைத்திருக்கிறார். பயனுள்ள தகவல்.

sarujan said...

பயனுள்ள தகவல்.

Post a Comment