Ads 468x60px

Pages

Wednesday 9 March 2011

பிட்டிபென்டர் இன்டர்நெட் செக்யூரிட்டி 3 மாதம் இலவசம்

இலவச ஆண்டிவைரஸ் தொகுப்புகள், இணைய பாதுகாப்பு மென்பொருள்கள் வந்தாலும் காசு கொடுத்து வாங்கும் பாதுகாப்பு மென்பொருள்களுக்கு இன்னும் மவுசு இருக்கிறது. அந்த நிறுவனங்கள் அடிக்கடி சலுகையாக சில மாதம் இலவச லைசென்ஸ் வழங்குவார்கள்.

Mcafee ஆண்டிவைரஸ் பிளஸ் பேஸ்புக் பயனர்களுக்கு 6 மாதம் இலவசம் என்று ஓர் இடுகை எழுதி இருந்தேன்.  இன்று பிட்டிபெண்டர் இன்டர்நெட் செக்யூரிட்டி (BitDefender Internet Security ) 2011 மூன்று மாத லைசென்ஸ் இலவசமாக வழங்குவதாக அறிய நேர்ந்தது.

வைரஸ், மால்வேர்களிடம் (Virus, Malware) இருந்து பாதுகாப்பு, பயர்வால் (Firewall) இருப்பதால் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பு, தவறான தளங்களை தடை செய்ய பேரண்டல் கண்ட்ரோல் (Parental Control) என்று இணைய இணைப்புள்ள கணினிக்கு முழுமையான பாதுகாப்பு வளையமாக இந்த மென்பொருள் திகழும்.

இந்த இன்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள்  பற்றி மேலும் அறிந்து கொள்ள பிட்டிபென்டர் தளத்திற்கு செல்லுங்கள். மூன்று மாத இலவச சலுகையை பெற மால்வேர் சிட்டி தளத்திற்கு செல்லுங்கள். 

0 comments:

Post a Comment