Ads 468x60px

Pages

Tuesday 8 March 2011

கூகிள் தேடலை மெருகூட்டும் இன்ஸ்டன்ட் ப்ரிவ்யு

நமக்கு இணையத்தில் தேவையானவற்றை பெற பெரும்பாலும் கூகிளை நாடி உள்ளோம். சரியான முடிவுகளை தந்தாலும் சில நேரம் நம் தேடலுக்கு சம்பந்தமில்லாத முடிவுகளும் வரும். 

அதற்கு காரணம் அதிகம் தேடப்படும் சூடான தலைப்புகளை கொடுத்து இணைய உரிமையாளர்கள் தங்கள் பக்கங்களை உருவாக்குவதுதான். உதாரணத்திற்கு "Endiran movie video songs" என்று தேடும் போது முதலில் சில பக்கங்கள் வந்து நிற்கும். ஆனால் எந்திரன் வீடியோ பாடல்கள் பற்றி குப்பை கதை அளந்து விட்டு உண்மையான வீடியோக்கள் எதுவும் இருக்காது. 

அந்த பக்கத்தின் தலைப்பில் மட்டும் "Endiran movie video songs" என்று கொடுத்து விட்டு நம்மையும் கூகிளையும் ஏமாற்றி இருப்பார் அந்த இணைய தளத்தவர். அவரின் நோக்கம் தில்லாலங்கடி வேலைகள் செய்து இணைய பயனர்களை தங்கள் தளத்துக்குள் வரவைத்து விட்டு போட்டுள்ள விளம்பரங்கள் மூலம் காசு பார்ப்பது. 

இது போன்ற கில்லாடி வேலைகளையும் தடை செய்து நல்ல முடிவுகளை தருவதால்தான் கூகிள் முன்னணியில் இருக்கிறது. கூகுளில் தேடல் முடிவுகளில் வரும் பக்கங்களை கிளிக் செய்து அந்த பக்கங்களுக்கு செல்லாமலேயே அந்த பக்கத்தின் படத்தை ப்ரிவ்யுவாக பார்க்கும் வசதி அளிப்பதே கூகிள் இன்ஸ்டன்ட் ப்ரிவ்யு. 

இதனை பயன்படுத்துவது குறித்து கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 




இதன் மூலம் அந்த பக்கங்களுக்கு சென்று பாப்அப் (Popup), விளம்பரங்கள் என்று அல்லல் படுவதை தவிர்க்க, அந்த பக்கங்களில் நாம் தேடும் விஷயம் இருக்கிறதா என்பதை தோராயமாக கண்டு கொள்ள முடியும். இருந்தால் செல்லலாம். இல்லையெனில் அடுத்த தேடல் முடிவிற்கு தாவி விடலாம். 

இன்ஸ்டன்ட் ப்ரிவ்யு பார்க்க ஒவ்வொரு தேடல் முடிவின் தலைப்புக்கு அருகில் லென்ஸ் படம் இருக்கும் அதை கிளிக் செய்து பார்த்தால் அந்த பக்கத்தின் ப்ரிவ்யு பார்க்கலாம். 




இப்போது இந்த வசதி மொபைலில் கூகிள் தேடல் முடிவுகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு உள்ளது. மொபைல் பயனர்களுக்கு இது தேடல் வேலையை மிகவும் எளிதாக்குகிறது. இது தொடர்பான மேலே உள்ள வீடியோவை பாருங்கள்.

இது போன்ற எளிமையான புதுமைகள்தான் கூகிளை இணைய உலகின் கடவுளாக வைத்துள்ளது. 

0 comments:

Post a Comment