Ads 468x60px

Pages

Wednesday 9 March 2011

டிராய் பெற்ற புகார்களில் ஏர்டெல் முதலிடம்

டிராய் [Telecom Regulatory Authority of India (TRAI)] இந்திய தொலை தொடர்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை, கட்டணம் தொடர்பாக புகார்களை பெற்று வருகிறது. 

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதில் முதலிடம் வகிக்கும் நிறுவனம் பாரதி ஏர்டெல். அதே போல் வாடிக்கையாளர்கள் டிராயிடம் அதிகம் புகார் அழிப்பது ஏர்டெல் குறைபாடுகளை பற்றித்தானாம். 

கடந்த மூன்றாண்டுகளில், டிராயிடம் அளிக்கப்பட புகார்களில் 3571 புகார்கள் ஏர்டெல் நிறுவனத்தை பற்றியவை. 2151 புகார்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை பற்றி.  1896 புகார்கள் வோடபோன் நிறுவனத்தை பற்றி. டாடா டோகோமா, ஐடியா நிறுவனங்கள் முறையே 1239,  925 புகார்களை பெற்றுள்ளன. 

இந்த விபரங்களை மக்களவையில் அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.  இந்த செய்தியை எகனாமிக் டைம்ஸில் படித்தேன். 

இவ்வளவு புகார்கள் பெற்று என்ன? இன்னும் இந்த நிறுவனங்கள் அப்பாவிகளிடம் மறைமுகமாக ஏமாற்றுவதை நிறுத்துவதாக தெரியவில்லை. வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமலேயே கிரிக்கெட் ஸ்கோர் அலெர்ட் க்கு ரூ. 30, மொபைல் ரேடியோவுக்கு ரூ. 25 என்று காசை பிடுங்குவது தொடர்கிறது. 

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் சில நாட்களுக்கொருமுறை "STOP" என்று 121 எண்ணுக்கு SMS அனுப்பி நீங்கள் ஏதும் கட்டண சேவைகளுக்கு சந்தாதாரராக உள்ளீர்களா என்று சோதித்து கொள்ளுங்கள். அப்படி ஏதும் இருந்தால் அதை நீக்க நீங்கள் பதில் SMS பெறுவீர்கள். அதன் வழிமுறைப்படி விலகி விடுங்கள். நீங்கள் அறியாமலேயே இது போன்ற கட்டண சேவைகள் உங்கள் மேல் திணிக்கப்பட்டு இருக்கலாம். 

இதைப் பற்றிய விபரங்கள் இங்கே உள்ளன. 

2 comments:

Anonymous said...

மாம்ஸ், ஏர்டெல்ல கண்பார்வை அற்ற ஒருவருக்கு நமீதா பேக் ஆக்டிவேட் பண்ணி காச புடுங்கிவிட்டான். உருப்படுவான்களா? புறப்போக்கு பொறுக்கிகள்

கணிவெளி said...

//மாம்ஸ், ஏர்டெல்ல கண்பார்வை அற்ற ஒருவருக்கு நமீதா பேக் ஆக்டிவேட் பண்ணி காச புடுங்கிவிட்டான். //

செம காமெடி பாஸ்... சத்தம் போட்டு சிரித்து விட்டேன்.

இதற்கு ஒரு தீர்வு ஏற்பட வேண்டும்.

Post a Comment