Ads 468x60px

Pages

Tuesday 1 March 2011

குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன் மினி?

ஐபோன்! இன்று வரை காசு படைத்தவர்களின் மொபைலாகவே இருந்து வருகிறது. நோக்கியா பல வித புது மொபைல் மாடல்களை போட்டு பார்த்தாலும், கூகுள் தனது ஆன்டிராயிட் மொபைல் தளம் மூலம் புதுமைகளை புகுத்தி வந்தாலும் ஐபோனை நெருங்க முடியவில்லை. 

அனைவரும் பயன்பெறும் வண்ணம் குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன் புதிய மாடல் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இதனை ஆப்பிளின் சீஒஒ (Chief Operating Officer ) டிம் குக் ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார். ஆப்பிள் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்குமான விலை மலிவான புதிய ஐபோனை உருவாக்கி வருவதாக தெரிவித்து உள்ளார். 

பொருளின் விலையை கருத்தில் கொள்ளும் சீனா போன்ற நாட்டு சந்தைகளை குறிவைத்து இந்த தயாரிப்பு இருக்கும் என்று அவர் கூறி உள்ளார். இது இந்தியாவிற்கும் பொருந்தும். 

விலை குறைவு சரி. தரம் எப்படி இருக்கும் என்ற குறிப்புகள் தெரிவிக்கப்படவில்லை.  ஆப்பிள் என்றாலே தரமானது என்ற பெயரை அந்நிறுவனம் பெற்றுள்ளது. எனவே இதுவும் கண்டிப்பாக தரமாக இருக்கும் என்று நம்புவோம்.

0 comments:

Post a Comment