கணினியை வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்க எத்தனையோ இலவச ஆண்டிவைரஸ்கள் வந்து விட்டாலும் வணிக ரீதியிலான ஆண்டிவைரஸ் மென்பொருள்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை.
ஆறுமாதம் மட்டுமே இலவசம். அதன் பிறகு கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்பதை கவனத்தில் கொள்க.
அவை இலவசமாக கிடைக்காதா என்று தேடுவோரும் உண்டு. அவற்றை தவறான முறையில் கிராக் செய்து பயன்படுத்தி தொல்லைகளுக்கு உள்ளாவோர் ஏராளம். பிரபல ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் சலுகையாக தனது மென்பொருள்களை சிலமாதங்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
ஆண்டிவைரஸ்களில் மேகபே (Mcafee) பிரசத்தி பெற்றது. இதன் ஆண்டிவைரஸ் பிளஸ் மென்பொருளின் விலை $27.99. பேஸ்புக் பாவனையாளர்களுக்கு தனது ஆண்டிவைரஸ் பிளஸ் மென்பொருளை ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது Mcafee.
இந்த சலுகையை பெற அவர்களுடைய பேஸ்புக் பக்கத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு பேஸ்புக் கணக்கு இருக்க வேண்டியது அவசியம்.
1. அங்கே லைக் (Like) பட்டனை கிளிக் செய்து ரசிகராகுங்கள்.
2. அடுத்து உங்கள் நாட்டினை உள்ளீடு செய்து “Get Yours Now” பட்டனை கிளிக் செய்யுங்கள்.
3. வருகின்ற விண்டோவில் "Allow" கிளிக் செய்யுங்கள். உங்கள் Mcafee கணக்கு உருவாக்கப்பட்டு விடும்.
4. உங்கள் Mcafee கணக்கிற்கான பாஸ்வோர்ட் உருவாக்கி கொள்ளுங்கள்.
5. வருகின்ற விண்டோவில் "Download" பட்டனை கிளிக் செய்தால் புதிய பக்கம் திறக்கும் அங்கே இலவச ஆண்டிவைரஸ் தொகுப்பை தரவிறக்கி கொள்ளுங்கள்.
ஆறுமாதம் மட்டுமே இலவசம். அதன் பிறகு கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்பதை கவனத்தில் கொள்க.
0 comments:
Post a Comment