Ads 468x60px

Pages

Wednesday 9 March 2011

பிளாகரில் பணிபுரிபவர்கள் சந்திப்பு

வலைப்பதிவர்கள் சந்திப்பு என்று அடிக்கடி படித்திருப்பீர்கள். இந்த இடுகை பிளாகர் (Blogger.com) வலைப்பதிவு சேவையில் பணிபுரிபவர்கள் சந்தித்ததை பற்றியது.

இணைய பயனர்கள் தங்கள் எண்ணங்கள், படைப்புகளை இணையத்தில் பகிர எளிமையான முறையில் வாய்ப்பளிப்பவை வலைப்பதிவுகள். இந்த வலைப்பதிவு சேவையினை வழங்குவதில் முதலிடம் பிடிப்பது பிளாகர். இது கூகுள் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் வலைப்பதிவுலகில் பெரும்பாலான வலைப்பதிவர்கள் பிளாகரில்தான் வலைப்பதிவு வைத்து உள்ளனர். இந்த சேவையை வழங்கும் பின்னணியில் பணிபுரிபவர்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருக்காதா?

பிளாக்கரில் பணிபுரிபவர்கள் அனைவரும் சிட்னியில் சந்தித்து உள்ளனர். இவர்கள்  ஐந்து கண்டங்களில் வெவ்வேறு கூகுள் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள். பெரும்பாலானோருக்கு இதுதான் முதல் சந்திப்பு என்று பிளாகர்,  புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு உள்ளது.


இந்த புகைப்படத்தில் நம்ம ஊர் ஆட்கள் எங்காவது இருக்கிறார்களா என்று தேடிப் பாருங்கள் :) . இது குறித்த பிளாக்கரின் செய்தி ஆங்கிலத்தில் இங்கே. அடுத்து பிளாக்கரில் புதிய வசதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறி உள்ளார்கள் .

சந்தோசம்தானே? :) 

1 comments:

calmmen said...

congrats

Post a Comment