Ads 468x60px

Pages

Thursday 3 March 2011

புதிய வசதிகளுடன் ஆப்பிள் ஐபேட் 2 அறிமுகம்

தகவல் தொழில்நுட்ப துறையில் புரட்சிகரமான தயாரிப்புகளை வெளியிடுவதில் ஆப்பிள் நிறுவனத்திற்கு நிகரில்லை. ஐபோனுக்கு அடுத்து அவர்களது தயாரிப்பில் மிக வரவேற்பை பெற்றவை ஐபேட் (IPad) எனும் டேப்லெட் பிசி (Tablet PC) வகைகள்.

ஐபேட் வெளியிட்டதற்கு பின்புதான் பல்வேறு நிறுவனங்களும் அதனை காப்பி செய்து தங்களது தயாரிப்புகளை வெளியிட்டு உள்ளனர். அவற்றில் குறிப்பிட தக்கவை Dell Streak, Samsung Galaxy Tab. நெட்புக் கணினிகளுக்கு இருந்த மார்கெட்டை சின்னா பின்னமாக்கிய பெருமை ஐபேடை சாரும். 

15 மில்லியனுக்கும் அதிகமான ஐபேட்களை இதுவரை விற்றுள்ளார்கள். ஐபேட்டின் அடுத்த வடிவம் ஐபேட் 2 நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.




1. ஐபோன் 4 ஐ விட அதி வேகமான பிராசசர் Dual Core A5 Processor . ஐபேட் 1 ஐ விட இரண்டு மடங்கு வேகமானது.

2. ஐபேட் 1 ஐ விட தடிமனில் 33% குறைவு. ஐபேட் 1 தடிமன் 13.4 mm. ஐபேட் தடிமன் 8.8mm.



3. ஐபேட் 1 -ல் பின்பக்க கேமரா மட்டுமே உண்டு. இதில் இரண்டு காமெராக்கள் உண்டு.  ஐபேட் 2 இல் வீடியோ சாட்டிங்குக்கு முன்பக்க கேமரா வசதியும் உண்டு.

4. இது பத்து மணி நேர பாட்டரி பேக்அப் உள்ளது.

5. கிராபிக்சுகளை கையாளுவதில் இது ஐபேட் 1 ஐ விட ஒன்பது மடங்கு வேகமானது.

6. இதன் மூலம் மற்றொரு ஐபேட் 2 உடனோ, ஐபோன் , மாக் ஓஎஸ் உடனோ வீடியோ கான்பரென்ஸ் வசதி ஏற்படுத்தி கொள்ளலாம்.

7. ஐபேட் 2 இன் எடை 1.3 பவுண்டுகள். ஐபேட் 1 இன் எடை 1.5 பவுண்டுகள்.

8. மார்ச் 11 இல் இருந்து விற்பனைக்கு கிடைக்கும். விலை 499 டாலரில் இருந்து ஆரம்பிக்கிறது. வெள்ளை நிறத்திலும் கிடைக்கிறது.

விலை விபரம்

    * iPad 2, 16 GB with Wi-Fi Only is for $499
    * iPad 2, 32 GB with Wi-Fi Only is for $599
    * iPad 2, 64 GB with Wi-Fi Only is for $699
    * iPad 2, 16 GB with Wi-Fi+3G  is for $629
    * iPad 2, 32 GB with Wi-Fi+3G is for $729
    * iPad 2, 64 GB with Wi-Fi+3G is for $829

இதில் 16 GB, 32 GB, 64 GB என்பது அவற்றின் சேமிப்பு அளவை (Memory Card)  குறிக்கும்.  Wi-Fi Only வெளியீடுகள் Wi-Fi மூலமாக மட்டுமே இணைய இணைப்பை பயன்படுத்தும்படி இருக்கும். Wi-Fi+3G வெளியீடுகளில் 3G வசதி மூலமும் இணைய இணைப்பை பயன்படுத்தி கொள்ளலாம். 

0 comments:

Post a Comment