Ads 468x60px

Pages

Wednesday 9 March 2011

பயர்பாக்ஸ் 4 RC பதிப்பு வெளியீடு

உலகளாவிய இணைய உலாவிகள் பயன்பாட்டின் பயர்பாக்ஸ் இரண்டாமிடம் பெறுகிறது. குரோம் உலாவி வெளியீட்டுக்கு முன்பு கூகுளும் பயர்பாக்சை ஆதரித்து பரப்பி வந்தது.

குரோம் வெளியீட்டுக்கு பிறகு இணைய உலாவிகள் சந்தையில் பெரும் போட்டி ஏற்பட்டது. கூகுள் குரோம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்க பயர்பாக்சும் தன்னை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.

பயர்பாக்சின் முந்தய பதிப்புகளை விட புதிய பயர்பாக்ஸ் பதிப்பு 4 அதிக மாற்றங்களுடன் வருகிறது. குரோமிடம் இருந்து பல விசயங்களை காப்பி செய்துள்ளார்கள். வேகமாகவும் உள்ளது. 

பல்வேறு  பீட்டா பதிப்புகளை அடுத்து பயர்பாக்ஸ் ஆர்சி  (Release Candidate) பதிப்பு வெளியாகி உள்ளது. அறிவிப்பை இங்கே பார்க்க.  தரவிறக்க இங்கே செல்லவும். 

பயர்பாக்ஸ் ரசிகர்கள் தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். பயன்படுத்த நன்றாக உள்ளது. இதன் இறுதி பதிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம். அப்போது எளிதாக அப்கிரேட் செய்து கொள்ளலாம்.  

0 comments:

Post a Comment