Ads 468x60px

Pages

Wednesday 9 March 2011

ஒரே நேரத்தில் பல எழுத்துருக்கள் ப்ரிவியு பார்க்க

இணைய பக்கமோ, கோப்புகளோ அவற்றை மெருகூட்ட ஆயிரக்கணக்கில் எழுத்துருக்கள் (Fonts) இலவசமாக கிடக்கின்றன. நாம் கணினியில் நமக்கு பிடித்த எழுத்துருக்களை நிறுவி வைத்திருப்போம்.

ஒரு வார்த்தைக்கு எழுத்துரு தேர்ந்தெடுக்கும் போது அந்த வார்த்தையை செலக்ட் செய்து ஒவ்வொன்றாக சோதித்து பார்ப்போம். எழுத்துருக்களின் பட்டியலை ஸ்க்ரோல்(Scroll) செய்து ஒவ்வொன்றாக சோதித்து பார்ப்பது சலிப்பூட்டும் விஷயம். 

இதனை எளிமையாக செய்ய தீர்வினை தருகிறது வோர்ட்மார்க் (wordmark.it) எனும் இணையதளம். இந்த இணையதளத்திற்கு சென்று நடுவில் உள்ள wordmark என்பதனை கிளிக் செய்து நீங்கள் சோதிக்க விரும்பும் வார்த்தையை டைப் செய்து கொள்ளுங்கள்.  

அடுத்து கீழே உள்ள Load Fonts என்பதனை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கணினியில் உள்ள எல்லா எழுத்துருக்களிலும் நீங்கள் டைப் செய்த வார்த்தை எப்படி இருக்கும் என்று பட்டியலிட்டு காட்டும். 


வார்த்தையை பெரிதாக்கி / சிறிதாக்கி பார்த்து கொள்ளலாம். நீங்கள் பயனராக அங்கே பதிவு செய்து கொண்டால்,  எழுத்துரு அளவுகளை மாற்றி பார்த்து கொள்ளலாம். சேமித்து வைத்து கொள்ளலாம். வார்த்தைகளை Lowercase / Uppercase மாற்றி கொள்ளலாம். 

இதன் மூலம் சரியான எழுத்துருவை எளிமையாக கண்டறிந்து நமது வேளைகளில் பயன்படுத்தி கொள்ளலாம். எழுத்துருக்களுடன் அதிகம் பணிபுரிபவர்களுக்கு இந்த இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

1 comments:

MHM Nimzath said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
http://nimzath.blogspot.com/2011/03/blog-post.html

Post a Comment